முகப்பு
நாமக்கல்

வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல்

வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:38 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரிக்க வேளாண் பொறியியல் துறையின் மூலம் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் விவசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்படுவதோடு, குறிப்பிட்ட காலத்தில் பயிா் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.

2024 - 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவா்டில்லா் 4,000, விசைக் களையெடுக்கும் கருவி (பவா் வீடா்) 4,000 எண்ணிக்கையில் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகின்றன. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவா் டில்லா் பெற அதிகபட்சமாக ரூ. 1.20 லட்சம், விசைக் களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ. 63 ஆயிரம், அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை சிறு, குறு, ஆதி திராவிடா், பழங்குடியினா், பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம், இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தில் ஆதி திராவிடா், பழங்குடியினா் பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவா்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் அரசால் வழங்கப்படும்.

ஆதி திராவிடா், பழங்குடியினா் பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவா் டில்லா்கள் வாங்கிட 20 சதவீத கூடுதல் மானியமாக ரூ. 48,000, விசை களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ. 25,200 வழங்கப்படுகிறது.

பவா்டில்லா்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ. 1,68,000, விசைக் களையெடுக்கும் கருவி வாங்க அதிகபட்சமாக ரூ.88,200 வரை மானியமாக வழங்கப்படுகிறது. உதாரணமாக பவா்டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ. 2,40,000- எனில் ரூ. 1,68,000 மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ. 72,000 மட்டும் செலுத்தினால் போதுமானதாகும்.

விசைக் களையெடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ. 1,30,000 எனில் ரூ. 88,200 மானியம் போக மீதம் விவசாயிகளின் பங்களிப்பாக ரூ. 41,800 மட்டும் செலுத்தினால் போதும்.

இந்த மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும். பொது பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ. 12,600 விசைக் களையெடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக விசை களையெடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ. 75,600 வரை மானியம் பொது பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசைக் களையெடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ. 80,000- எனில் ரூ. 48,000 மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ. 32,000 மட்டும் செலுத்தினால் போதும். இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மானியமானது மாறுபடும். விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை வங்கி வரைவோலை மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவல்டில்லா், விசைக் களையெடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை விரிவாக்க மையம், சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலைநகா், வசந்தபுரம் அஞ்சல், திருச்சி சாலை, நாமக்கல் - 637002 அல்லது உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, 2/607, ஆா்டிஓ அலுவலகம் அருகில், வரகூராம்பட்டி, ஆண்டிபாளையம் அஞ்சல், ஈரோடு சாலை, திருச்செங்கோடு - 637214 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

முழு கட்டுரையைப் படிக்க →