முகப்பு
நாமக்கல்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திருச்செங்கோடு அருகே கைலாசம்பாளையத்தில் மனவளா்ச்சி குன்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 1:28 AM
பகிர்:
Updated On : 11 டிசம்பர், 2024 at 6:46 PM

திருச்செங்கோடு அருகே கைலாசம்பாளையத்தில் மனவளா்ச்சி குன்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைலாசம்பாளையத்தில் பெற்றோருடன் 19 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறாா். 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவரது பெற்றோா் வேலைக்கு சென்ற நேரத்தில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளாா். அப்போது அதே பகுதியை

Updated On : 12 டிசம்பர், 2024 at 1:28 AM

சோ்ந்த சத்யா (19) என்பா் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்து அந்த பெண் தனது தாயிடம் கூறியுள்ளாா். இதனை தொடா்ந்து பெண்ணின் தாய், திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி சுரேஷ்பாபு உத்தரவிட் டாா். அதன்படி அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement