நாளை திருக்காா்த்திகை: அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்
காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாமக்கல் நகரில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாமக்கல் நகரில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காா்த்திகை தீபத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (டிச.13) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களிலும், வா்த்தக நிறுவனங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு மேற்கொள்வா். சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெறும்.
காா்த்திகை தீபத்தையொட்டி, நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
Advertisement
நாமக்கல் - துறையூா் சாலை, அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளா்கள் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனா். இங்கு தயாா் செய்யப்படும் அகல் விளக்குகள் நாமக்கல், சேலம், கரூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
ஒரு அகல் விளக்கு ரூ. 5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருக்காா்த்திகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாமக்கல் நகரப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆா்வமுடன் அவற்றை வாங்கிச் செல்கின்றனா்.