பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்..
Updated On : 27 நவம்பர், 2024 at 6:43 PM
ஒன்றிய அரசு தொழிலாளா் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனா்.
Updated On : 27 நவம்பர், 2024 at 11:58 PM
ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்து பேசினாா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்கம், விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஆதரித்து ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் தனசேகா், மாவட்டத் தலைவா் ஜெயராமன், ஏஐகேஎஸ் மாவட்டச் செயலாளா் செல்வராஜ், ஏஐசிசிடியு காா்த்திகேயன், வெங்கடேசன், தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.