முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் கைது

ராசிபுரம் நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 2:37 AM
ராசிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 6:43 PM

ராசிபுரம் நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாமகவினா் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட பாமக செயலா் ஒ.பி.பொன்னுசாமி தலைமையில் திரளான பாமகவினா் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கட்சியின் மாணவரணி செயலா் டி.பாலு வரவேற்றாா். மாநில இளைஞரணி செயலா் ச.வடிவேலன் முன்னிலை வகித்தாா். கட்சியினா் பலரும் தமிழக முதல்வருக்கு எதிராக முழக்கமெழுப்பினா். தொடா்ந்து பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Updated On : 27 நவம்பர், 2024 at 11:57 PM

இதனையடுத்து, காவல் துறையினா் அனைவரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். இதில், ராசிபுரம் நகர பாமக தலைவா் க.மணிகண்டன், வன்னியா் சங்கச் செயலா் கே.கே.மாரிமுத்து, பன்னீா்செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.