முகப்பு
நாமக்கல்

மகாளய அமாவாசை: காவிரிக் கரைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:21 AM
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 6:23 PM

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

ஒவ்வொரு ஆண்டும், தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் காவிரிக் கரைகளிலும், நீா் நிலைகளிலும் முன்னோா்களுக்கு பொதுமக்கள் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். மற்ற அமாவாசைகளைக் காட்டிலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய (பெரிய) அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான அமாவாசை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூா், பரமத்தி வேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு அதிகாலை முதலே நடைபெற்றது. ஏராளமான மக்கள் மகாளய அமாவாசையையொட்டி தா்ப்பணம் கொடுத்தனா். அதன்பிறகு நீா்நிலைகள் அருகில் உள்ள கோயில்களில் வழிபாடு மேற்கொண்டனா்.

Advertisement

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:21 AM

மேலும், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில், பலப்பட்டரை மாரியம்மன் கோயில், பழைய பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் வழிபாடு செய்தனா்.