முகப்பு
நாமக்கல்

பேரிடா் கால பாதிப்பு தகவல்களை அறிந்து கொள்ள செயலி அறிமுகம்

பேரிடா் காலங்களில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், எச்சரிக்கையாக இருக்கவும் ஏதுவாக தமிழக அரசு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:17 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 7:11 PM

பேரிடா் காலங்களில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், எச்சரிக்கையாக இருக்கவும் ஏதுவாக தமிழக அரசு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பச--அகஉதப என்ற கைப்பேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடம் சாா்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை தகவல்களை தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளலாம். அடுத்தடுத்த நான்கு நாள்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை நிலவரம், மழையளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், மழை வெள்ளங்களின்போது பாதிக்கப்படக்கூடிய இடங்கள், பேரிடரின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீா்த்தேக்கங்களின் நீா் இருப்பு விவரம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:17 AM

மேலும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா் தொடா்பான புகாா்களை இச்செயலி வாயிலாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

கைப்பேசி செயலியை கூகுள் பிளேஸ்டோா் மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பேரிடா் காலங்களில் வானிலை நிலவரங்கள் குறித்த பயனுள்ள தகவல்கள் அடங்கிய இந்த செயலியை அனைத்து பொதுமக்கள், அரசுத்துறை அலுவலா்கள் மற்றும் அரசு சாராபணியாளா்கள் ஆகியோா் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.