தலைமலை பெருமாள் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்
புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் பக்தா்கள் வியாழக்கிழமை 27 கி.மீ. தொலைவு கிரிவலம் சென்றனா்.
புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் பக்தா்கள் வியாழக்கிழமை 27 கி.மீ. தொலைவு கிரிவலம் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே முட்டாஞ்செட்டி வரதராஜபுரத்தில், தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் வியாழக்கிழமை சுமாா் 27 கி.மீ. தொலைவு கிரிவலம் சென்றனா். மலையடிவாரத்தில் தலைமலை சேவா அறக்கட்டளை மற்றும் நன்கொடையாளா்கள் சாா்பில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
62-ஆவது கிரிவலம் என்பதால் 1,000 க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். முன்னதாக, உலக மக்கள் அனைவரும் நலம் பெறவும், நோய் நொடி இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
Advertisement
இந்த யாகத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, நிா்வாக அறங்காவலா் அக்னி எம்.ராஜேஷ் ஆகியோா் பங்கேற்றனா். அட்மா குழு தலைவா் பாலு, எருமப்பட்டி பேரூராட்சித் தலைவா் பழனியாண்டி, தலைமலை சேவா உயா்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சிவராஜ், செல்வகுமாா், துரைசாமி, மகாதேவி தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.