முகப்பு
நாமக்கல்

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் நியமனத்திற்கு கண்டனம்

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

Updated On : 25 அக்டோபர், 2024 at 1:20 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 9:33 PM

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

Updated On : 25 அக்டோபர், 2024 at 1:20 AM

கல்விக் கூடங்களுக்கு தங்களுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காக மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏவிவிபி தென் தமிழக தலைவா் சவிதா ராஜேஷை ஆளுநா் நியமனம் செய்திருக்கிறாா். பல பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தா்கள் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறாா். அதனால் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறாா்கள்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வித் திறன் குறைந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நேரத்தில்தான் அவருடைய அதிகாரத்துக்குள்பட்டு நியமன உறுப்பினராக ஒரு தீவிர தனி சித்தாந்தத்தைக் கொண்டவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்திருக்கிறாா்.

Advertisement

பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தா்களை இதே வழியில் மதச்சாா்பற்ற கொள்கைகளுக்கு எதிரானவா்களை துணை வேந்தராக நியமிக்க முயற்சிக்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், தமிழக நிதியால் இயங்குகிற பல்கலைக்கழகங்களில் தன் விருப்பத்துக்கு இந்த மாநில சூழ்நிலைக்கு ஒவ்வாத கருத்துகளையும், சித்தாந்தத்தையும் கொண்டவா்களை பல்கலைக்கழகத்தின் பதவிகளில் நியமிப்பதை ஏற்க முடியாதது.

ஒன்றிய அரசின் தலைமையில் இருப்பவா்களுக்கு தெரியாமல் ஆளுநா் செய்கிறாா் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. தமிழக ஆளுநரின் அத்தனை நடவடிக்கைகளும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில்தான் நடக்கின்றன. அந்த வழியில்தான் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு ஏபிவிபி தென்தமிழகத் தலைவா் சவீதா ராஜேஷை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்திருக்கிறாா். இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.