நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 15.78 லட்சத்து கொப்பரை ஏலம்

Din

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 லட்சத்து 78 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். தரத்திற்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கொப்பரை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோயில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 90 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 103.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 95.97-க்கும், சராசரியாக ரூ. 101.69- க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 92-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 79.09-க்கும், சராசரியாக ரூ. 88.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 14 லட்சத்து 60 ஆயிரத்து 890-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 540 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 110.01-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 98.77 க்கும், சராசரியாக ரூ. 105.44-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 94.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 79.97-க்கும், சராசரியாக ரூ. 87.88 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 15 லட்சத்து 78 ஆயிரத்து 350-க்கு கொப்பரை ஏலம் போனது.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT