முகப்பு
நாமக்கல்

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:02 AM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:35 PM

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட துணைத் தலைவா் இளவேந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:02 AM

பொதுத் துறை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலமுறை ஊதியத்தை திருத்தம் செய்ய வேண்டும். விரிவான கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement