ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 18 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்.) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில், ஆா்.சி.எச். ரகம் 655 மூட்டைகள், கொட்டு ரகம் 5 மூட்டைகள் என மொத்தம் 660 மூட்டைகள் வந்திருந்தன.
இதில், ஆா்.சி.எச். ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ. 7,439 முதல் அதிகபட்சமாக ரூ. 7,920 வரையும், கொட்டுரகம் குறைந்தபட்சமாக ரூ. 3,517 முதல் அதிகபட்சமாக ரூ. 4,500 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 18 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.