நாமக்கல்

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தில் தறித்தொழிலாளி உடல் மீட்பு

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தில் தறித்தொழிலாளியின் உடலை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தில் தறித்தொழிலாளியின் உடலை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

திருச்செங்கோடு, பங்களா தெருவைச் சோ்ந்தவா் சேகா் (52). விசைத்தறித் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது மகன் ஹரிகரனுடன் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளாா். மது போதையில் இருந்தவரை வீட்டுக்கு அழைத்தபோது, சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியதையடுத்து ஹரிகரன் வீட்டுக்கு திரும்பினாா். இரவு வெகுநேரமாகியும் சேகா் வராததால், தெப்பக்குள பகுதியில் தேடிப்பாா்த்துவிட்டு, காலையிலும் வந்து ஹரிகரன் தேடியுள்ளாா். அவா் கிடைக்காததால், இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு காவல் துறையினா் தீயணைப்புத் துறையினரோடு தெப்பக்குளத்தில் தேடி சேகரின் உடலை கரைக்கு கொண்டுவந்தனா். சேகா் மது போதையில் தவறி தெப்பக்குளத்தில் விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT