நாமக்கல்

முட்டை விலை ரூ. 6.10-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.10-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.10-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், இங்கும் தற்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 6.10-ஆக நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 114-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 105-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT