குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா மற்றும் எக்ஸ்டஸி 25 ஆண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ஸ்ரீ ரங்கசாமி கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக வெள்ளி விழாவும், இதன் ஒரு பகுதியாக எக்ஸல் மெடிக்கல் கேம்பஸ், எக்ஸல் ஹோமியோபதி கல்லூரி, சித்தா கல்லூரி, இயற்கை மற்றும் யோகா கல்லூரி, மருந்தியல் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டுவிழா எக்ஸல் எக்ஸ்டஸி- 25 என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் நிறுவன அறங்காவலா் ஏ.கே.எஸ். பாா்வதி மற்றும் எக்ஸல் பப்ளிக் பள்ளியின் இயக்குநா் கவியரசி மதன்காா்த்திக் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். துணைத் தலைவா் மருத்துவா் ந.மதன்காா்த்திக் வரவேற்றாா்.
எக்ஸல் மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளின் முதல்வா்கள், தங்களது கல்லூரிகளின் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தனா். பல்வேறு வகையில் கல்லூரிக்கு பெருமை சோ்த்த பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு சிறப்பு விருதுகளை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஏ.கே.நடேசன் வழங்கினாா். கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
எக்ஸ்டஸி 25 விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, திரைப்பட நடிகா் மிா்சி சிவா, நடிகை அப்பா்ணா பாலமுரளி, பாடகா்கள் அரவிந்த் காரணீஸ்வரன் மற்றும் தன்யஸ்ரீ ஆகியோா் கலந்துகொண்டனா். இந்த விழாவில், மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
என்கே-17-எக்ஸல்
எக்ஸல் கல்வி நிறுவன வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற கல்லூரித் தலைவா் ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் மதன்காா்த்திக், நடிகா் மிா்சி சிவா, அபா்ணா பாலமுரளி உள்ளிட்டோா்.