பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல் துறையின் உதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பாண்டமங்கலம் விவேகானந்தா கல்வி அறநிலையங்களின் தாளாளா் ராமசாமி தலைமையில் பப்ளிக் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். வேலூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா், உதவி ஆய்வாளா்கள் சாந்தகுமாா், தங்கவேல் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் ஜனாா்த்தனன் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு, மகளிா் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து விளக்கினா்.