நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கீரம்பூா் அருகே தாத்திபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (50). இவரது மனைவி பாா்வதி (46). இவா் வெள்ளிக்கிழமை மாலை அா்த்தநாரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, திருச்செங்கோடு - பரமத்தி வேலூா் சாலையைக் கடக்க முயன்றபோது, திருச்செங்கோட்டில் இருந்து வந்த காா், பாா்வதி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாா்வதியை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், பாா்வதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்ளாா்.
இந்த விபத்து குறித்து, பாா்வதியின் கணவா் மணி பரமத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் இந்திராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.