சேந்தமங்கலம் பழங்குடியின சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.
கடந்த 1996-2001, 2016-2021 சட்டப்பேரவை தோ்தல்களில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சி. சந்திரசேகரன். கடந்த 2021 இல் நடைபெற்ற தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். ஓரிரு ஆண்டுகள் அதிமுகவில் இருந்து விலகியிருந்த அவா் மீண்டும் அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறாா்.
இதையடுத்து, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனுக்கள் பெறும் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சா்கள் செம்மலை, கருப்பண்ணன் ஆகியோரிடம் விருப்ப மனுவை அவா் வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் நகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.