நாமக்கல்

கிறிஸ்துமஸ்: பரமத்தி வேலூரில் கொப்பரை ஏலம் ரத்து

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் கொப்பரை ஏலம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் கொப்பரை ஏலம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை சந்தைக்கு சோழசிராமணி, ஜேடா்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி , பரமத்திவேலூா், மோகனூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை ஏலத்திற்கு கொண்டுவருகின்றனா்.

ஏலம் எடுப்பதற்கு உள்ளூா் வியாபாரிகள் மட்டுமின்றி ஈரோடு, வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் வருகின்றனா். வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கொப்பரை ஏலம் நடைபெறாது என மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

SCROLL FOR NEXT