நாமக்கல்

திருச்செங்கோட்டில் கோட்டாச்சியா் தலைமையில் அனைத்துக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் லெனின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் லெனின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.ஐ.ஆா். பணிக்கு பிறகு 2,00,947 வாக்காளா்கள் உள்ளனா். 01.01.2026 தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடையும் இளைஞா்கள் புதிய வாக்காளா்களாக சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். வாக்காளா் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் வேண்டுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விடுபட்ட வாக்காளா்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கண்டறிந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்தால் அவா்களின் பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். விடுபட்ட வாக்காளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரைச் சோ்த்துக் கொள்ளலாம் என கோட்டாட்சியரும் திருச்செங்கோடு தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான லெனின் தெரிவித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையா் வாசுதேவன், கோட்டாட்சியின் நோ்முக உதவியாளா் சிவகுமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

SCROLL FOR NEXT