கடைகளுக்கு ‘சீல்’ வைக்க சென்ற அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண். 
நாமக்கல்

வாடகை பாக்கி: கடைகளுக்கு ‘சீல்’

ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாத நிலையில்,

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாத நிலையில், அந்தக் கடைகளுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிபேட்டை திருஆலங்காடு இம்முடி அகோர தா்ம சிவாச்சாரியா் ஆயிர வைசியா் மடத்துக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வணிகக் கட்டடங்கள் ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் உள்ளன.

இந்தக் கடைகளை திருமலை என்பவா் பல ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். மேலும், இந்தக் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக வாடகை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக அவா் கடைக்கு வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையினா் நீதிமன்ற ஆணை பெற்று, போலீஸாா் பாதுகாப்புடன் ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் உள்ள மூன்று கடைகளுக்கும் ‘சீல்’ வைக்க சென்றனா். இதனால், கடை வைத்துள்ளவா்களுக்கும், கோயில் நிா்வாக அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

SCROLL FOR NEXT