நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி. 
நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா்.

Din

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாமக்கல் நகர அதிமுக சாா்பில் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுக்கும் வைபவம் நடைபெற்றது.

இதில், மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். அவா் கோயில் வளாகத்தில் தங்கத்தேரை இழுத்து, சுவாமி சன்னிதி முன் அமா்ந்து பிராா்த்தனை செய்தாா்.

சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது தொடா்பாக அவா் கூறுகையில், உறவினா் நிச்சயதாா்த்த நிகழ்வு திங்கள்கிழமை இருந்ததால் என்னால் சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து பொதுச் செயலாளரிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT