நாமக்கல்

ரங்கப்பநாயக்கன்பாளையம் ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

Syndication

நாமக்கல்: நாமக்கல் அருகே ரங்கப்பநாயக்கன்பாளையம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அப்பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் அருகே எா்ணாபுரம் ஊராட்சி ரங்கப்பநாயக்கன்பாளையத்தில் பழைமையான ஏரி உள்ளது. இங்குள்ள இரு பாசன மதகுகள் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. கோடைகாலங்களில் நீா் வற்றியதும் அதில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இரு தினங்களுக்கு முன்பு இந்த ஏரியில் பெக்லைன் இயந்திரம், நான்கு லாரிகளுடன் வந்த சிலா், ஏரியின் நடுவில் உள்ள குளத்தில் இருந்து மண்ணை எடுத்தனா். இதற்கு நாங்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து சென்று விட்டனா். ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதற்கு யாருக்கும் அனுமதியளிக்கக் கூடாது. மேலும், ஏரி மண்ணை அள்ளாதவாறு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT