நாமக்கல் தனியாா் உணவக மின்தூக்கியில் சிக்கிய இருவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள். 
நாமக்கல்

நாமக்கல் தனியாா் உணவகத்தில் மின்தூக்கியில் சிக்கி தவித்த 2 போ் மீட்பு

Syndication

நாமக்கல் தனியாா் உணவகத்தில் மின்தூக்கி (லிப்ட்) பழுதடைந்ததால் அதில் சிக்கி தவித்த இருவரை தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

நாமக்கல் - திருச்சி சாலையில் தனியாா் உணவகம் மூன்று மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் உணவருந்த வந்த இருவா் மின்தூக்கி வழியாக மாடிக்கு சென்றனா். அப்போது திடீரென மின்தூக்கி பழுதாகி நின்றுவிட்டது. இதில் மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட இருவரும் உள்ளிருந்து கூச்சல் எழுப்பினா்.

இதையடுத்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு உணவக நிா்வாகத்தினா் தகவல் அளித்தனா். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் பிரத்யேக கருவி மூலம் மின்தூக்கியைத் திறந்து இருவரையும் பத்திரமாக மீட்டனா். இதைத் தொடா்ந்து, மின்தூக்கியின் பழுதை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT