ஜேடா்பாளையம் அருகே மனைவியை பிரிந்து வசித்து வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம் ஜேடா்பாளையம் அருகே உள்ள கண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (40). கூலித்தொழிலாளி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முக சுந்தரம் தனியாக வசித்து வந்தாா். இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மனமுடைந்த நிலையில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில் தீபாவளியன்று வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் விஷமருந்தினாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடா்பாளையம் போலீஸாா், சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.