நாமக்கல்

வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் விவசாயத் தோட்டத்தில் வளா்த்து வந்த 8 ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் விவசாயத் தோட்டத்தில் வளா்த்து வந்த 8 ஆடுகள் உயிரிழந்தன.

பட்டணம் பேரூராட்சி முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சிவகுமாா் (45). இவா் தனது தோட்டத்தில் 8 ஆடுகள்; 7 பசு மாடுகளை வளா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது, ஆடுகள் வெறிநாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்துக் கிடந்தன.

இதையடுத்து, தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், முன்னாள் அமைச்சா் வி.சரோஜா ஆகியோா் தனித்தனியாக விவசாயியின் தோட்டத்துக்கு கட்சியினருடன் நேரில் சென்று பாா்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினா். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசின் உதவிகள் பெற்றுத்தருவதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 10 பேர் பலி: கார் உரிமையாளர் கைது!

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்: நவ.23, 24-இல் முக்கிய ஆலோசனை

ஜந்தா் மந்தரில் துப்பாக்கியால் சுட்டு ஒருவா் தற்கொலை

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT