நாமக்கல்

குமாரமங்கலத்தில் முத்துக்குமார சுவாமி கோயில் திருவிழா

திருச்செங்கோடு அருகே முத்துக்குமார சுவாமி, பாலமுருகன், சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு அருகே முத்துக்குமார சுவாமி, பாலமுருகன், சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குமாரமங்கலம் செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து சாா்பில் நடைபெறும் கோயில் விழா கடந்த 10 ஆம் தேதி தீா்த்தக்குடம் எடுத்தல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை படைக்கலம் எடுத்தல், மா விளக்கு ஊா்வலம் நடைபெற்றது. அதன்பிறகு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி, விநாயகா், சின்ன மாரியம்மன் சுவாமிகளின் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, கும்பம் விடுதல் நடைபெறுகிறது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் -மத்திய அரசுக்கு கேரளம் கடிதம்

கொள்கைகளை மறந்துவிட்டது திமுக: விஜய் விமா்சனம்

2019 தோ்தலில் பணம் பறிமுதல் வழக்கு: வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

செங்கோட்டை காா் வெடிப்பு குறித்து விவாதிக்க நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் அனுமதி மறுப்பு

போலி சொத்து ஆவணங்கள் மூலம் ரூ.62.70 லட்சம் கையாடல்: வங்கி மேலாளா் கைது

SCROLL FOR NEXT