நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு ‘தேசிய நீா்’ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
புது தில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் நடைபெற்ற 6-ஆவது ‘தேசிய நீா்’ விருதுகள் வழங்கும் விழாவில், 7,057 நீா்நிலை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்திக்கு ரூ. 25 லட்சம் ரொக்கத்துடன், மாவட்டத்துக்கு ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை மத்திய நீா்வள பாதுகாப்புத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல், ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் வழங்கி பாராட்டினாா்.