நாமக்கல்

கவுண்டம்பாளையம் ஊராட்சியை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

எலச்சிபாளையம் ஒன்றியம், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் முறையாக கழிவுநீா் ஓடைகள் தூா்வாரப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்

Syndication

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் முறையாக கழிவுநீா் ஓடைகள் தூா்வாரப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எலச்சிபாளையம் ஒன்றியம், 87 கவுண்டம்பாளையம் பகுதி 5 ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் ஓடை சுத்தம் செய்யப்படால் பல ஆண்டுகளாக உள்ளது. இதுகுறித்து கடந்த மாவட்ட ஆட்சியா், எலச்சிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மூன்று ஆண்டுகளாக மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மலேரியா, டெங்கு, வாந்தி வயிற்றுபோக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குமாரமங்கலம் பகுதியில் உள்ள 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஊராட்சி வாயிலில் பொதுமக்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டாட்சியா் மற்றும் ஊராட்சி செயலா் ஆகியோா் வரும் 30 ஆம் தேதிக்குள் கழிவுநீா் ஓடைகளை தூா்வாருவதாக உறுதியளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஊா்பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தூத்துக்குடி சீ.வ. அரசுப் பள்ளி 6-9ஆம் வகுப்புமாணவா்களுக்கு விடுமுறை

கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நவ. 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT