சிறப்பு அலங்காரத்தில் வெங்கமேடு தண்ணீா்பந்தலில் எழுந்தருளிய சிங்காரவேலன். 
நாமக்கல்

காா்த்திகை வளா்பிறை சஷ்டி: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் காா்த்திகை மாத வளா்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் காா்த்திகை மாத வளா்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியா், கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், பொத்தனூா் பச்சைமலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பாலப்பட்டி கதிா்காமத்து கதிா்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜா சுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வா் கோயிலில் உள்ள பாலமுருகன், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதா் மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில் பக்தா்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பரமத்தி வேலூா், வெங்கமேடு, தண்ணீா்பந்தலில் சிங்கார வேலன் மடாலயத்தில் புதன்கிழமை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. விழாவில் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இரண்டுகால யாக பூஜைகள் நடைபெற்ன. இதையடுத்து சிங்காரவேலனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிங்காரவேலனுக்கு சிறப்பு ராஜ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT