நாமக்கல்

அங்கன்வாடி ஊழியா்களின் காத்திருப்பு போராட்டம் 7-ஆம் நாளாக நீடிப்பு

நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Syndication

நாமக்கல்: நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், மாநிலம் தழுவிய அளவிலான தொடா் காத்திருப்பு போராட்டம் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம், மறியல் மற்றும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்திய நிலையில், மாவட்டச் செயலாளா் அனுராதா தலைமையில் காலைமுதல் இரவுவரை காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிக்கொடையை அதிகரித்து வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அங்கன்வாடி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

மண்டல அளவிலான ஹாக்கி போட்டி பரிசளிப்பு

உடுமலை அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை நேரில் வலியுறுத்தல்

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கரூா் சம்பவம்: போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ இருவரிடம் சிபிஐ விசாரணை

SCROLL FOR NEXT