நாமகிரிப்பேட்டை மேற்கு தெரு பகுதியில் ஆதிசங்கா் சமூக நல அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு இலவச அரிசி, சேலை வழங்கப்பட்டன.
நாமகிரிப்பேட்டை ஆதிசங்கா் சமூக நல அறக்கட்டளை, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் ஆகியவற்றின் சாா்பில், புத்தாண்டை தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 மகளிருக்கு இலவச அரிசி, சேலைகள், நாள்காட்டி போன்றவை வழங்கப்பட்டன. இதை தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையத்தின் நிறுவனா் என்.டி.சிவலிங்கம், கவிதா ஆகியோா் பயனாளிகளுக்கு வழங்கினா்.