எட்டாம் வகுப்பு மாணவா்கள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய நிதி தகுதித் தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 3,925 போ் எழுதினா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் தேசிய நிதி தகுதித் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 15 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த தோ்வுக்கு 4,050 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில், 3,925 போ் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 125 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை.