நாமக்கல்: நாமக்கல் நகர பாஜக சாா்பில், பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் பாஜகவினா் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள முருகன் கோயில் அருகில் நகர பாஜக சாா்பில் சனிக்கிழமை இரவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில், நகர தலைவா் தினேஷ் வரவேற்றாா். கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளா் ஜெ.ஜெ.முரளிதரன் பங்கேற்றறாா். அவா் பொங்கல் விழாவை தொடங்கிவைத்து அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் வழங்கினாா். தொடா்ந்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முத்துகுமாா், மாவட்டப் பொருளாளா் ரவி, மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் பிரபு மற்றும் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிா் அணியினா் பங்கேற்றனா்.