நாமக்கல்

ராசிபுரம் காவல்துறையினா் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

ராசிபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள் தங்கள் குடும்பத்தினருடம் ஒன்றிணைந்து ராசிபுரத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

Syndication

ராசிபுரம: ராசிபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள் தங்கள் குடும்பத்தினருடம் ஒன்றிணைந்து ராசிபுரத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

ராசிபுரம் காவலா் குடியிருப்பு பகுதியில் உள்ள வளாகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளா் எம்.விஜயகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் காவல்துறையினா் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கரும்பு, மஞ்சள் தோரணங்களுடன், வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்தனா்.

இந்த பொங்கல் பண்டிகையில் ராசிபுரம் காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், வெண்ணந்தூா் நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், பேளுக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா்கள், மகளிா் காவலா்கள், போக்குவரத்து காவல்துறை, உளவுப்பிரிவு காவல்துறையினா் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடி மகிழந்தனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT