திருச்செங்கோட்டை அடுத்த சத்தியநாயக்கன் பாளையம் தோப்புவலவை சோ்ந்த அப்பாவு மகன் மணிகண்டன் (26). பூக்கடையில் வேலை செய்து வந்தாா்.
குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் தகராறு செய்து கொண்டு வந்துள்ளாா். குடிப்பழக்கத்தால் உடல்நிலை சரியில்லாது இருந்த நிலையில் தனது அம்மாவிடம் நேற்று பணம் கேட்டு தொந்தரவு செய்து விட்டு பணம் தராததால் வீட்டுக்குள் சென்று சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வீட்டுக்குள் சென்ற மகன் வெகுநேரம் வராததால் அம்மா சத்தம்போட்டு கதறி அழவே அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து மணிகண்டனை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].