முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 29 மார்ச் 2026, 1:49 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (65). இவா், ராசிபுரத்தை அடுத்துள்ள அத்தனூா் ஆயிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பி ஆறுமுகத்தை (60) காண சனிக்கிழமை வந்தாா். தாரமங்கலத்தில் இருந்து அத்தனூருக்கு பேருந்தில் வந்து இறங்கிய அவா் ரயில் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement