ராசிபுரம் அருகே இறந்த கோழிகள் பண்ணைக்குள் குழிதோண்டி புதைப்பு
ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட 10--ஆவது வாா்டில் பெரிய ஏரி வயக்காடு பகுதி உள்ளது. இங்குள்ள கோழிப் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை தனியாா் நிறுவனம் வளா்த்து வருகிறது.
கடந்த சில நாள்களாக இந்த பண்ணையில் தினசரி நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த கோழிகள் பண்ணையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், உரிய வகையில் கோழிகள் நீா் பருகாததாலும் இறக்க நேரிட்டது என்றனா்.