நேரு யுவகேந்திரா மற்றும் பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப் பணி வழிகாட்டி மையம் சார்பில், தேசப்பற்று மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியினை, பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மா.மணிவண்ணன் தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் வி.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஜெ.சம்பத்குமார், பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப் பணி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பி.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க விழாவையடுத்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 100-க்கும் மேற்பட்டோர் பேச்சுப் போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.5 ஆயிரம், 2-ஆம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.2 ஆயிரம், 3-ஆம் இடம் பெறுவோருக்கு ரூ.ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.
2018-ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிக்கும், மாநில அளவில் வெற்றியடைந்தோர், தேசிய அளவிலான போட்டிக்கும் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.