முகப்பு
சேலம்

திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

ஓமலூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ஓமலூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவரை போலீஸார் கைது செய்தனர்.
தீவட்டிப்பட்டி அருகேயுள்ள கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் அன்பழகன் (32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் சிவரஞ்சனி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இதையடுத்து, ஓமலூரில் உள்ள தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்த அன்பழகனுக்கும்,  தும்பிப்பாடி பகுதியைச் சேர்ந்த  இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் திருமணம் செய்வதாகக் கூறி அந்த பெண்ணுடன், அன்பழகன் நெருங்கிப் பழகியுள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமாகி  விட்டதாகவும்,  தன்னைத் திருமணம் செய்ய அன்பழகன் மறுப்பதாகவும்   ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அன்பழகனை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →