முகப்பு
உலகம்

பாரசீக வளைகுடாவில் ரத்தம்தான் ஓடும்: டிரம்ப்புக்கு ஈரான் வெளிப்படையான எச்சரிக்கை

ஈரான் தீவுகள் மீது போர் தொடுத்தால், போர் தொடுப்பவர்களின் ரத்தம் பாரசீக வளைகுடாவில் ஓடும் என்று ஈரான் நாடாளுமன்றம் எச்சரிக்கை

Updated On : 12 மார்ச், 2026 at 3:55 PM
பாரசீக வளைகுடா - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் தீவுகள் மீது போர் தொடுத்தால், போர் தொடுப்பவர்களின் ரத்தம் பாரசீக வளைகுடாவில் ஓடும் என்று ஈரான் நாடாளுமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி அளித்து வருகிறது.

இந்த நிலையில், பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் தீவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடாவில் ரத்தம்தான் ஓடும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் வெளிப்படையாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இதுகுறித்து ஈரானிய நாடாளுமன்ற தலைவர் முகமது பகேர் கலிபஃப் தனது எக்ஸ் பக்கத்தில், "ஈரானிய தீவுகளின் மண்ணை ஆக்கிரமிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஈரானின் அனைத்து கட்டுப்பாடுகளையும் சிதைத்து விடும்.

நாட்டின் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டு, பாரசீக வளைகுடாவை போர் தொடுப்பவர்களின் ரத்தத்தால் ஓடச் செய்வோம்.

அமெரிக்க ராணுவ வீரர்களின் ரத்தத்துக்கு, டிரம்ப்தான் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

summary

Iran parliament speaker Mohammad Bagher Ghalibaf says any invasion of Iran's islands will make the Persian Gulf run with the blood of invaders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.