சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் குறித்த தகவலை எழுதி வைக்க உத்தரவு
பள்ளி வளாகத்தில் பெற்றோர் அறியும் வண்ணம் அரசின் அங்கீகாரம் பெற்ற விவரங்களை குறிப்பிட்டு அங்கீகார ஆணையின் எண், நாள், அங்கீகாரம்
பள்ளி வளாகத்தில் பெற்றோர் அறியும் வண்ணம் அரசின் அங்கீகாரம் பெற்ற விவரங்களை குறிப்பிட்டு அங்கீகார ஆணையின் எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை எழுதி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.சுந்தரபாண்டியன் என்பவரால் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் இயங்கும் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி.) போன்ற இதர வாரியப் பாடத் திட்டங்களின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக், மழலையர் பள்ளிகள் தங்களது பள்ளி வளாகத்தில் பெற்றோர் அறியும் வண்ணம் அரசின் அங்கீகாரம் பெற்ற விவரம் குறிப்பிட்டு, அங்கீகார ஆணை எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை எழுதி தெரிவித்தல் வேண்டும்.
அங்கீகாரம் பெறப்படவில்லை எனில் நாளது வரை அங்கீகாரம் பெறப்படவில்லை என்ற விவரத்தையும் குறிப்பிட்டு பள்ளி முகப்பில் தட்டி (போர்டு) வைத்திட வேண்டும். சி.பி.எஸ்.இ. போன்ற பிற வாரியப் பள்ளிகள் சம்பந்தப்பட்ட வாரியத்தில் இணைப்பு ஆணை எண், நாள் போன்ற விவரங்களை கூடுதலாக எழுதி வைத்திடல் வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.