முகப்பு
சேலம்

பிளஸ் 2 மாணவியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சேலம் அருகே காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:51 am IST
பகிர்:

சேலம் அருகே காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி வீரபாண்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25),  கூலித் தொழிலாளி.  இவர், வீரபாண்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி பூரணியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே,  காதலுக்கு பூரணி மறுத்த நிலையில்,  கடந்த 2015-ஆம் ஆண்டு லோகநாதன் வீரபாண்டி அரசுப் பள்ளி அருகே காத்திருந்தாராம். 
அப்போது,  பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பூரணியை,  லோகநாதன் மறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம்.  அதற்கு பூரணி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த லோகநாதன் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதையடுத்து,  லோகநாதனை ஆட்டையாம்பட்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். 
இந்த வழக்கை சேலம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் செவ்வாய்க்கிழமை விசாரித்து லோகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.