தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் நாற்காலி வைரலாவது ஏன்? என்ன ஸ்பெஷல்?
தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் நாற்காலி வைரலாவது பற்றி..
தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. காரணம், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிதான்.
தில்லி முதல்வராக இருந்த கேஜரிவால் ரூ.33 கோடி பங்களாவில் இருந்ததாக பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் இன்று தில்லி முதல்வரின் நாற்காலி பற்றி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
முன்னாள் நடிகர் ராகேஷ் பேடியுடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை தில்லி முதல்வர் ரேகா குப்தா மே 25ஆம் தேதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் இந்தப் புகைப்படத்தைப் பகிரும்போது நிச்சயம் இது இவ்வளவுபெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நினைத்திருக்க மாட்டார்.
Advertisement
Advertisement
காரணம், அவர் அமர்ந்திருந்த நாற்காலி பற்றியதுதான் அந்த விமர்சனங்கள்.
இந்த நாற்காலி ரெட் ஓக் இம்பெரியோ வகையைச் சேர்ந்தது. இந்த ப்ரீமியம் எக்ஸிக்யூட்டிவ் வசதிக் கொண்டிருக்கும். இதில் உள்ள வசதிகள் இவ்வாறு நீள்கின்றன.
எலக்ட்ரானிக் முறையில் மசாஜ் செய்யும் அமைப்பு, கால்களுக்கு ஓய்வளிக்கும் தானியங்கிகள், பூஜ்ய - புவியீர்ப்பு சக்தி காரணமாக நாற்காலி கீழே விழாது, அமர்வதற்கு மிகவும் சொகுசான மெத்தையைக் கொண்டிருக்கும், மேல்பகுதியில் மிகவும் மிருதுவான தோலால் மூடப்பட்டிருக்கும்.
இதன் விலை ரூ.66 ஆயிரம் முதல் ரூ.82 ஆயிரம் வரை இருக்கலாம். சில இணையதளங்களில் இதன் விலை ரூ.1 லட்சத்துக்கும் மேல் என்கிறார்கள்.
தில்லி முதல்வராக ரேகா பதவியேற்றது முதல் மெட்ரோவில் பயணிப்பது போன்ற பல நடவடிக்கைகளை செய்து ஊடகங்களில் கவனம் ஈர்த்தவர், இன்று இந்த சொகுசு நாற்காலியால் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகியிருக்கிறார்.
பலரும் இந்த நாற்காலியின் விலையை இணைத்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா கூறியிருப்பதாவது, துவாரகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், முதல்வரின் இந்த நாற்காலி, அரசின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலரும், இந்த நாற்காலி அரசு நிதியிலிருந்து வாங்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது முதல்வர் அறையா அல்லது ரேகா குப்தாவின் அலுவலகமா என்பது குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
About Delhi Chief Minister Rekha Gupta's chair going viral..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.