திவிஷா சர்மா மரணம்! கருக்கலைப்பு, ரூ.7 லட்சம் என விசாரணையை திசைதிருப்பிய கணவர்!
திவிஷா சர்மா மரணத்தில் விசாரணையை திசைதிருப்பும் வகையில் கணவர் தகவல்களை அளித்தது பற்றி..
வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் திவிஷா சா்மா உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்து கைதான அவரது கணவர் சமர்த் சிங், ஆரம்பம் முதலே வழக்கை திசை திருப்பும் வகையில் தகவல்களை அளித்து வந்ததாக சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
திவிஷா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் இன்று போபால் விரைந்து, சிறப்பு விசாரணை அமைப்பிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.
அப்போதுதான், சிறப்பு விசாரணை அதிகாரிகளின் விசாரணையின்போது, திவிஷா சர்மாவின் கணவர் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வழக்கு விசாரணையை திசைதிருப்பி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement