சேலம்

சங்ககிரியில் ஆடிப்பூர விழா

DIN

சங்ககிரி  ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர விழா, சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஆதிபராசக்தி  வார வழிபாட்டு மன்ற ஆடிப்பூரவிழாவையொட்டி சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்து கஞ்சி கலயத்தை எடுத்துக் கொண்டு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் முன்பிருந்து செவ்வாடை பக்தர்கள் தலையில் சுமந்தபடி சந்தைபேட்டை, புதிய எடப்பாடி சாலை, பவானி பிரதான சாலை வழியாக வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து  பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவில் செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.  விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஐ.ஜி.யை மாற்றக்கூடாது என வலியுறுத்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT