முகப்பு
சேலம்

கொலை வழக்கில் போலீஸார் தேடிவந்த நபர் தற்கொலை முயற்சி

ஓமலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸார் தேடி வந்த நபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 9:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஓமலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸார் தேடி வந்த நபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஓமலூர் அருகேயுள்ள ஊ - மாரமங்கலம் கிராமத்தின் காட்டுப்பகுதியில்  பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். போலீஸார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஓமலூர் அருகேயுள்ள பண்ணப்பட்டி,  காங்கியானூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலு என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதிக்கு காயத்ரி, யசோதா ஆகிய பெண் குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கம் கொண்ட சுரேஷ்,  குடும்பத்துடன் பொம்மிடியில் குடியிருந்துள்ளார். சுரேஷின் மனைவி அலமேலு அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவருடன் தவறான உறவு வைத்திருந்ததைக் கண்டறிந்த சுரேஷ் கண்டித்துள்ளார். இந்த நிலையில், சுரேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதால்,  கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரது மனைவி அலமேலுவிடம் போலீஸார்  விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக் காதலர் சுந்தரத்துடன் இணைந்து அலமேலு தனது கணவர் சுரேஷை கொலை செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீஸார் தேடி வந்த சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை விஷமருந்தி  தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு, ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.