சோனா கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
சேலம் சோனா கலை, அறிவியல் கல்லூரியில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
சேலம் சோனா கலை, அறிவியல் கல்லூரியில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
சோனா கல்வி குழுமத்தின் தலைவர் சி.வள்ளியப்பா, மாணவர் சேர்க்கையைத் துவக்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து 1,184 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு கணினி அறிவியல் துறையிலும், 1,140 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு வணிகவியல் துறையிலும் முதல் சேர்க்கைக்கான சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார் மற்றும் காதர் நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.