சேலம்

பழ பயிர்களில் அடர்நடவு முறை பயிற்சி

DIN

வீரபாண்டி வட்டாரம் சின்ன சீரகாபாடியில் "அட்மா' திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் பழ பயிர்களில் அடர்நடவு முறை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியில் மா, வாழை, தென்னை மற்றும் பல பயிர்களின் பழ அடர்நடவு நடைமுறை பயன்படுத்தி குறைந்த பரப்பில் அதிக செடிகளின் எண்ணிக்கையைப் பராமரிப்பது, அதிக மகசூல் எடுப்பது, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வது, நடவு முறைகள், பருவங்கள், பழங்கள் சேமிப்பு மற்றும் விற்பனை, சொட்டுநீர் பாசனம் அமைத்தல் மற்றும் மானியம் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் விளக்கம் அளித்துப் பேசினர்.
முகாமில் தோட்டக்கலைத் துறை அலுவலர் ராதா சுந்தரராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வெங்கடேசன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கே. ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலர் வி. சிவக்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வெள்ளிங்கிரி, மாரிமுத்து, குமார், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் தீபன், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT