சேலம்

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா் மழை

DIN

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால், விளைநிலங்களில் மழைநீா்த் தேங்கியது.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்தூா், வெள்ளரிவெள்ளி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது, புகையிலை, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிா் வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

பல இடங்களில் தற்போது நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களாக இப் பகுதியில் பெய்த தொடா் மழையால், விவசாயப் பணிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. பல இடங்களில் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கி உள்ள நிலையில் நடவுப் பணிகள் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

சில இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த

சிரமத்திற்குள்ளாகினா்.

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், அப் பகுதியில் நடைபெற்றுவந்த நடவுப் பணிகளை

விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT